Enable Javscript for better performance
4ஆவது நாளாக மழை திண்டுக்கல்லில் 2 மணி நேரம் பெய்தது- Dinamani

சுடச்சுட

    

    4ஆவது நாளாக மழை திண்டுக்கல்லில் 2 மணி நேரம் பெய்தது

    By திண்டுக்கல்,  |   Published on : 09th May 2014 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானதை அடுத்து, திண்டுக்கல் பகுதியில் தொடர்ந்து 4ஆவது நாளாக மழை பெய்தது. வியாழக்கிழமை பிற்பகலில் தொடர்ந்து 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் ஆறாக தண்ணீர் ஓடியது.

    திண்டுக்கல்லில் வியாழக்கிழமை பிற்பகல் 1 மணி அளவில் லேசான சாரலுடன் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் சாரல் வலுவான மழையாக மாறியது. இதனால், இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள், ஆங்காங்கே வாகனத்தை நிறுத்திவிட்டு ஒதுங்கினர்.

    மழை தீவிரம் அடைந்ததால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்பட்டது. இதனால், மதுரை மற்றும் திருச்சி செல்லும் நான்கு வழிச் சாலையில்(திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா பகுதி) செல்லும் கார்கள், லாரிகள் மற்றும் பேருந்துகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே மிதமான வேகத்தில் சென்றன.

    சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்: இந்த மழையால், திண்டுக்கல் ஆர்.எம். காலனி பிரதான சாலை, தாடிக்கொம்பு சாலை, கரூர் சாலை ஆகிய பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, கார் மற்றும் பேருந்து ஓட்டுநர்களும் சிரமத்துடன் வாகனத்தை மெதுவாக ஓட்டிச் சென்றனர். ஆர்.எம். காலனி 1ஆவது கிராஸ் பகுதியில், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் தேங்கியது. சில தாழ்வான இடங்களில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை, மணல் மூலம் தாற்காலிக தடுப்புகளை ஏற்படுத்தி தடுத்தனர். இதேபோல், ஆர்.எம். காலனி மின்மயானம் அருகில் பிரதான சாலையில், மழைநீர் தேங்கி நின்றதால், சாலையின் வலதுபுறமாகவே அனைத்து வாகனங்களும் சென்றன.

    திண்டுக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை வரை பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:

    திண்டுக்கல்-15.40, கொடைக்கானல்-69.20, நத்தம்-32.50, நிலக்கோட்டை-41.20, பழனி-6, வேடசந்தூர்-28.05, சத்திரபட்டி-13.50, வேடசந்தூர் புகையிலை மையம்-29.06, கொடைக்கானல் போட் கிளப்-97.50, காமாட்சிபுரம்-23.80. மொத்தம் 356.21 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai