Enable Javscript for better performance
சிறுவன் கொலை வழக்கில்4 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சிறுவன் கொலை வழக்கில்4 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேர் கைது

    By திண்டுக்கல்  |   Published on : 10th May 2014 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நான்கு ஆண்டுகளுக்கு முன் சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அடுத்துள்ள ஆண்டிவாடன்செட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (எ) போஸ். இவரது மகன் தினேஷ்குமார் (16). கடந்த 2010 ஏப்ரல் 2ஆம் தேதி, தினேஷ்குமார் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.

    இது குறித்து, சாணார்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வநதனர். பின்னர், அம்பாத்துரை ஆய்வாளர் கணேசன் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட தினேஷ்குமாருக்கும், புங்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பிச்சைமுத்து என்பவரின் மகளுக்கும் பழக்கம் இருந்து வந்தது தெரியவந்தது. இதையறிந்த பிச்சைமுத்துவின் மகன் பவுல்ராஜ், பலமுறை தினேஷ்குமாரைக் கண்டித்த விவரமும் வெளிவந்துள்ளது.

    அதன்பின்னர் கிடப்பில் போடப்பட்ட விசாரணை, மாவட்டத்தில் சமீபத்தில் அதிகரித்து வரும் தொடர் கொலையால் மீண்டும் உயிர் பெற்றது.

    மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. ஜெயசந்திரனின் உத்தரவின்பேரில், மீண்டும் பி. பவுல்ராஜிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், செம்பட்டி அடுத்துள்ள வீரக்கல் பகுதியைச் சேர்ந்த பெ. நாகராஜ் (36), புங்கம்பாடியைச் சேர்ந்த சு. ஈஸ்வரன் (22) ஆகியோருடன் சேர்ந்து, தினேஷ்குமாரை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து, மூவரையும் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai