Enable Javscript for better performance
பழனியில் 10 பவுன் நகை, ரூ.2.4 லட்சம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    பழனியில் காவல்நிலையம் எதிரே உள்ள வீட்டில் பணம், நகைகள் திருடப்பட்டுள்ளதாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    பழனி அடிவாரம் வடக்கு கிரிவீதியில் காவல்நிலையம் எதிரே குடியிருப்பவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி சகுந்தலா (43). இவர் வீட்டின் முன்பகுதியில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் உறவினர் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சகுந்தலா கடையையும், வீட்டையும் பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.

    வெள்ளிக்கிழமை ஊர்திரும்பிய சகுந்தலா, வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் அவர் வைத்திருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ. 2 லட்சத்து 40 ஆயிரத்தை காணவில்லை. அவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. மேலும், வீட்டில் இருந்த எல்சிடி டிவியையும் எடுத்து சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து அடிவாரம் காவல் நிலையத்தில் சகுந்தலா கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai