Enable Javscript for better performance
மாவட்ட அளவில் 3 இடங்களையும் கைப்பற்றிய மாணவிகள்- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட அளவில் 3 இடங்களையும் கைப்பற்றிய மாணவிகள்

    By திண்டுக்கல்,  |   Published on : 10th May 2014 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கல்வி மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களையும், திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் மாணவிகளே கைப்பற்றியுள்ளனர்.

    அதன் விவரம் வருமாறு:

    திண்டுக்கல் கல்வி மாவட்டம்:

    புனித வளனார் பள்ளி மாணவி எஸ்.காயத்ரி 1187 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். பாட வாரியாக பெற்றுள்ள மதிப்பெண்கள்: தமிழ் - 197, ஆங்கிலம் - 195, இயற்பியல் - 200, வேதியியல் - 195, உயிரியல் - 200, கணிதம் - 200.

    அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.ஜனனி 1185 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். பாட வாரியாக இவருக்கு கிடைத்துள்ள மதிப்பெண்: தமிழ் 194, ஆங்கிலம் 192, இயற்பியல் 199, வேதியியல் 200, உயிரியல் 200, கணிதம் 200.

    புனி வளனார் பள்ளி மாணவி கே.அக்ஷயா 1182 மதிப்பெண்கள் பெற்று 3ஆவது இடம் பெற்றுள்ளார். பாட வாரியாக அவர் பெற்றுள்ள மதிப்பெண் விவரம்: தமிழ் 190, ஆங்கிலம் 195, இயற்பியல் 200, வேதியியல் 199, உயிரியல் 198, கணிதம் 200.

    பழனி கல்வி மாவட்டம்:

    ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவிகள் எம்.பிரியங்கா, பி.பவித்ரா ஆகியோர் பழனி கல்வி மாவட்ட அளவில் முதல் இரண்டு இங்களையும் கைப்பற்றியுள்ளனர். பாட வாரியாக அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண் விவரம்: பிரியங்கா- தமிழ் 193, ஆங்கிலம் 193, இயற்பியில் 199, வேதியியல் 200, உயிரியல் 199, கணிதம் 200, மொத்தம் 1184.

    பவித்ரா - தமிழ் 192, ஆங்கிலம் 187, இயற்பியல் 200, வேதியியல் 200, உயிரியல் 199, கணிதம் 200, மொத்தம் 1178.

    நெய்காரப்பட்டி ஸ்ரீó தேவி மேல்நிலைப் பள்ளி மாணவி கே.சௌந்தர்யா 1175 மதிப்பெண்கள் பெற்று கல்வி மாவட்ட அளவில் 3ஆவது இடம் பெற்றுள்ளார். பாடங்களில் அவர் பெற்றுள்ள மதிப்பெண்: தமிழ் 189, ஆங்கிலம் 191, இயற்பியல் 198, வேதியியல் 198, உயிரியல் 199, கணிதம் 200.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai