Enable Javscript for better performance
முதலிடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் ஆர்வம்- Dinamani

சுடச்சுட

    

    முதலிடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் ஆர்வம்

    By திண்டுக்கல்  |   Published on : 10th May 2014 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்ட அளவில் முதல் 2 இடங்களைப் பிடித்த மாணவிகள் மருத்துவத் துறையில் ஆர்வம் இருப்பதாக தெரிவித்தனர்.

    திண்டுக்கல் வருவாய் மாவட்ட அளவில் எஸ்.காயத்ரிதேவி(திண்டுக்கல் புனித வளானர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி) 1187 மதிப்பெண், கே.ஜனனி(திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல் நிலைப் பள்ளி) 1185 மதிப்பெண், எம்.பிரியங்கா(ஒட்டன்சத்திரம் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக். பள்ளி மேல்நிலைப் பள்ளி) 1184 மதிப்பெண் பெற்று முறையே முதல் முன்று இடங்களை கைப்பற்றியுள்ளனர்.

    அடுத்து எந்த துறையைத் தேர்வு செய்யவுள்ளனர் என்பது குறித்து இவர்களிடம் செய்தியாளர்கள் கேட்டதற்க மூவருமே மருத்துவத்துறையில் சாதிக்க விரும்புவதாகவே தெரிவித்துள்ளனர். முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளின் பெற்றோர் மற்றும் மதிப்பெண் விவரம்:

    எஸ்.காயத்ரிதேவி(முதலிடம்):

    இவரது பெற்றோர் தமிழாசிரியர்கள். தந்தை கே.சோமசுந்தரம் கொண்டமநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை தமிழாசிரியராக உள்ளார். தாய் எஸ்.தனலட்சுமி, பாலராஜக்கப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தமிழாசிரியை.

    காயத்ரிதேவி எதிர்காலத்தில் எலும்பு முறிவுப் பிரிவில் சிறந்த மருத்துவராக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். பாடவாரியாக அவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு: தமிழ் -197, ஆங்கிலம் - 195, கணிதம் - 200, இயற்பியல் - 200, வேதியல் - 195, உயிரியல் - 200. மொத்தம் 1187 மதிப்பெண்.

    கே.ஜனனி(இரண்டாம் இடம்):

    நெசவுத் தொழில் செய்து வரும் கே.ஆர்.கண்ணன், கே.தினமணி தம்பதியரின் மகளான இவரது தேர்வும் மருத்துவத்துறையாகவே உள்ளது. பாடவாரியாக இவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் தமிழ் -194, ஆங்கிலம் 192, இயற்பியல் 199, வேதியல் 200, உயிரியல் 200, கணிதம் 200. மொத்தம் 1185 மதிப்பெண்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai