Enable Javscript for better performance
மோட்டார் சைக்கிள் மோதல்:வியாபாரி உள்பட 2 பேர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மோட்டார் சைக்கிள் மோதல்:வியாபாரி உள்பட 2 பேர் சாவு

    By திண்டுக்கல்,  |   Published on : 10th May 2014 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், வியாபாரி உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

    திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்துள்ள சிங்கிலிப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் வெள்ளிக்கிழமை(மே 9) இரவு மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் நோக்கி வந்துள்ளார். சிலுவத்தூர் அடுத்துள்ள ஜம்புலியம்பட்டி அருகே வளைவில் வந்த போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில் பலத்த காயமடைந்த அ.செல்வராஜ்(48) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த நாகலாபுரத்தைச் சேர்ந்த தேங்காய் வியாபாரி க.மாயகிருஷ்ணன்(30) என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai