Enable Javscript for better performance
லாரி மீது சுற்றுலாப் பேருந்து மோதல்:ஓட்டுநர் உள்பட 2 பேர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    லாரி மீது சுற்றுலாப் பேருந்து மோதல்:ஓட்டுநர் உள்பட 2 பேர் சாவு

    By திண்டுக்கல்,  |   Published on : 10th May 2014 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    லாரி மீது சுற்றுலாப் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில், ஓட்டுநர் உள்பட 2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்துள்ள சிங்காரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 50 பேர் மதுரை, கன்னியாகுமரி, மூணாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதற்காக வியாழக்கிழமை இரவு தனியார் பேருந்தில் புறப்பட்டுள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த சக்ரவர்த்தி பேருந்தை ஓட்டி வந்துள்ளார்.

    அதிகாலை 5 மணி அளவில் அந்த பேருந்து திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அடுத்துள்ள லட்சுமணம்பட்டி அருகே கரூர்- திண்டுக்கல் நான்குவழிச் சாலையில் வந்தது. அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, பேருந்து லாரி மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் சக்ரவர்த்தி (50), பயணி குப்புச்சாமி (70) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    காயமடைந்த ரோஜா (45), ராஜம்மாள் (45), சண்முகம் (40), கமலா (25), சின்னம்மாள் (62), காந்தி (50), தீபிகா (5), உமா (26), மல்லிகா (50), நாகேந்திரன் ஆகிய 10 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், குமார் (45), கௌதம் (55), சரண்யா(22), முத்து (50), சக்திவேல் (40) ஆகிய 6 பேர் திண்டுக்கல் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து குறித்து வேடசந்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai