Enable Javscript for better performance
அரசு பள்ளி மாணவர் முதலிடம்- Dinamani

சுடச்சுட

    

    பிளஸ்2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் அளவில் மாணவரே முதலிடம் பெற்றுள்ளார்.

    மாவட்டத்தில் உள்ள பழனி மற்றும் திண்டுக்கல் கல்வி மாவட்ட அளவில் முதல் முன்று இடங்களையும் மாணவிகளே பெற்றுள்ளனர். ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான முதலிடத்தை மாணவர் சௌந்தரராஜா பெற்றுள்ளார்.

    1140 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்ற எஸ்.சௌந்தரராஜா(அரசினர் மேல் நிலைப் பள்ளி கே.ராமநாதபுரம்) பாட வாரியாக பெற்றுள்ள மதிப்பெண் விவரம்: தமிழ் 178, ஆங்கிலம் 184, இயற்பியல் 200, வேதியியல் 194, உயிரியல் 196, கணிதம் 188.

    1135 மதிப்பெண்களுடன் பழனி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி டி.தெய்வப்பிரியா மற்றும் எஸ்.பாத்திமா நஷ்ரீன் ஆகியோர் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். பாட வாரியாக தெய்வப்பிரியா பெற்றுள்ள மதிப்பெண்கள் விவரம்: தமிழ் 189, ஆங்கிலம் 188, இயற்பியல் 193, வேதியியல் 192, உயிரியல் 180, கணிதம் 193.

    எஸ்.பாத்திமாநஷ்ரீன் பெற்றுள்ள மதிப்பெண்: தமிழ் 182, ஆங்கிலம் 174, இயற்பியல் 196, வேதியியல் 196, உயரியல் 194, கணிதம் 190.

    மேலும் முதல் 3 இடங்களையும் பழனி கல்வி மாவட்டமே பெற்றுள்ளது. அதேபோல் முதலிடம் பெற்றவர்களில், சௌந்தராஜா மட்டுமே ஒரு பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இயற்பியல் பாடத்தில் அவர் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai