Enable Javscript for better performance
கோடை உழவுக்கு உதவிய தொடர் மழை- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை, கோடை உழவுக்கு பேருதிவியாக அமைந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர் .

    திண்டுக்கல் மாவட்டத்தில் நஞ்சப் பயிர் முதல் மானாவாரி பயிர் வரை அனைத்து விதமான பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால், அனைத்து நீர் நிலைகளும் வறண்டுவிட்டன. இதனால் கோடையில் நிலத்தை உழுது போடுவதற்கு கூட நிலத்தில் ஈரப் பதம் இல்லாத நிலை ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையில் கடந்த சில நாள்களாக, மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழையால் மானாவாரி நிலங்களுக்கு ஈரப்பதம் கிடைத்துள்ளது. இதனால் கோடை உழவு நடத்த இயற்கை வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். தற்போது நிலத்தை உழுது போட்டால், ஆடி பட்டத்தில் மானாவாரி நிலங்களில் விதைப்பதற்கு எளிதாக இருக்கும் என அவர்கள் மேலும் நம்பிக்கை தெரிவித்தனர்.

    கடந்த 4 நாள்களாக பெய்து வரும் மழையால், எந்தவித பயிர் சாகுபடியும் செய்ய முடியாவிட்டாலும் கால்நடைகளுக்கான தீவனப் பயிர்களை உருவாக்குவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் நிலவி வந்த கடுமையான குடிநீர் பிரச்னைக்கும் தாற்காலிக தீர்வு கிடைத்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai