Enable Javscript for better performance
ஜல்லிக்கட்டுக்குத் தடை கொசவபட்டியில் வீடுகளில் கருப்புக் கொடி- Dinamani

சுடச்சுட

    

    ஜல்லிக்கட்டுக்குத் தடை கொசவபட்டியில் வீடுகளில் கருப்புக் கொடி

    By நத்தம்  |   Published on : 11th May 2014 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதைத் தொடர்ந்து சனிக்கிழமை கொசவபட்டி கிராம பொதுமக்கள் வீடுகள் மற்றும் கடைகளில் கருப்புக் கொடி ஏற்றியுள்ளனர்.

    தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதற்கு, தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. நத்தம் அருகே உள்ள கொசவபட்டியில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இக்கிராமத்தில் ஏராளமான மாடுபிடி வீரர்களும், சுற்றவட்டாரக் கிராமங்களான அதிகாரிபட்டி, புகையிலைபட்டி, சேர்வீடு, கோபால்பட்டி கிராமங்களில் ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்களும் உள்ளனர். இந்நிலையில் உச்சநீதிமன்ற தடையால் இவர்கள் கவலையடைந்துள்ளனார்.

    இதுகுறித்து, கொசவபட்டி கிராம மக்கள் கூறுகையில், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது கவலைக்குரியது. மேலும் தமிழர்களின் வீர விளையாட்டு அழிந்துவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு கவலை தெரிவித்து நாங்கள் கருப்புக் கொடி ஏற்றியுள்ளோம். ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம் எனக் கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai