Enable Javscript for better performance
நர்சிங் பிரிவில் 100 சதம் தேர்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதிய 21292 பேரில் 19355 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மொழிப் பாடங்களில் 476 பேர் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிற பாடங்களில் தேர்ச்சிப் பெறாதவர்களின் எண்ணிக்கை வருமாறு:

    ஆங்கிலம் 608, இயற்பியல் 396, வேதியியல் 336, உயிரியல் 127, தாவரவியல் 71, விலங்கியல் 41, புள்ளியியல் 1, கணினி அறிவியல் 153, புவியியல் 5, கணிதம் 583, வரலாறு 328, பொருளாதாரம் 450, அரசியல் அறிவியல் 17, வணிகவியல் 392, கணக்கு பதிவியல் 657, இந்திய கலாச்சாரம் 10, வணிக கணிதவியல் 1.

    அதிகபட்சமாக கணக்கு பதிவியல் பிரிவில் 657 பேர் தேர்ச்சி அடையவில்லை. நர்சிங் பிரிவில் 337 பேரும், மனையில் பாடப்பிரிவில் 93 பேரும் முழுமையாக தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

    கொடைக்கானல் சீயோன் பள்ளி 100 சதம் தேர்ச்சி

    கொடைக்கானல், மே 10:கொடைக்கானல் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.பள்ளியின் மாணவி ஆர்.காயத்ரி 1200-க்கு 1163-மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். எஸ்.ஷாகின் 1139 மதிப்பெண் 2ம் இடமும், நிவேகா 1133 மதிப்பெண்ணுடன் 3-ம் இடமும் பெற்றுள்ளனர். கணக்குப் பதிவியிலில் அதே பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் காட்வின், ஐஸ்வர்யா, கெஸிபா ஆகியோர் 200-மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    தேர்ச்சி பெற்ற மாணவ,மாணவிகளை பள்ளித் தாளாளரும் முன்னாள் நகர்மன்றத் தலைவருமான கே.சி.ஏ.குரியன் ஆப்ரகாம் மற்றும் பள்ளி முதல்வர்,ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai