Enable Javscript for better performance
விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு- Dinamani

சுடச்சுட

    

    பழனி ஸ்ரீ பாலமுருகன் பாலிடெக்னிக் கல்லூரியில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது.

    பழனி ஸ்ரீ பாலமுருகன் பாலிடெக்னிக் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் மூன்று நாள்கள் நடைபெற்றது. புதன்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாம் நிறைவு விழாவுக்கு கல்லூரி செயலர் பேராசிரியர் பொன்னுச்சாமி தலைமை வகித்தார். ரேணுகாதேவி பள்ளி விளையாட்டு ஆசிரியர் ராமகிருஷ்ணன், நகராட்சி மேல்நிலைப் பள்ளி விளையாட்டு ஆசிரியர் நாட்ராயன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

    முகாமில் கையுந்து பந்து, பூப்பந்து, சதுரங்கம் மற்றும் கபடி போன்ற விளையாட்டுகளில் பயிற்சி பெற்ற 24 பள்ளிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டன. கல்லூரி முதல்வர்(பொறுப்பு) பத்மநாபன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai