Enable Javscript for better performance
ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் - Dinamani

சுடச்சுட

    

    ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்

    By வத்தலக்குண்டு  |   Published on : 12th May 2014 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வத்தலக்குண்டில் மாவட்ட அளவிலான கிராம ஊராட்சி மன்றத் பெண் தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் கணேசன் தலைமை வகித்தார். செயலர் தனலட்சுமி வரவேற்றார். மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களைச் சேர்ந்த ஊராட்சி அமைப்புகளின் பெண் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள் சந்தித்த மற்றும் சந்திக்கவிருக்கும் சிக்கல்கள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

    கூட்டமைப்புக்கான ஆண்டுத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    முப்பது ஊராட்சிகளில் மக்கள் திட்டம் தயாரித்தல், 10000 குடும்பங்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்தல். 56 கிராம ஊராட்சிகளில் சமூக தணிக்கை செய்தல், 14000 வீடுகளுக்கு காய்கறி தோட்டம் ஏற்படுத்துதல், 28 ஊராட்சிகளில் குறுநிதி மன்றங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் 15 பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பொன்னம்பலம் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டமைப்பின் பொருளாளர் மரியபுஷ்பம் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai