Enable Javscript for better performance
குருவப்பா மேல்நிலைப் பள்ளி 97சதம் தேர்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    பிளஸ் டூ தேர்வில் பழனி அருகே நெய்க்காரபட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளி 97 சதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

    பழனி அருகே நெய்க்காரபட்டி எஸ்கேசி நகரில் குருவப்பா மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அதிக அளவில் கிராமப்புற மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது வெளியான மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வில் இப்பள்ளி 97சதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

    மாணவர் ராஜ் பிரகாஷ் 1141 மதிப்பெண் பெற்று முதலிடமும், மாணவர் செல்லப்பாண்டி 1139 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மாணவி கனிமொழி 1136 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். 6 பேர் 1100 மதிப்பெண்களுக்கு மேலும், 42 பேர் 1000 மதிப்பெண்களுக்கு மேலும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதம், இயற்பியல், வணிகவியலில் மாணவர்கள் 200க்கு இருநூறு பெற்றுள்ளனர்.

    பொருளியல் மற்றும் வேதியியலில் அதிக மதிப்பெண் 197, புள்ளியியலில் அதிக மதிப்பெண் 193, உயிரியலில் அதிக மதிப்பெண் 191 ஆகும். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளிக்குழு தலைவர் பத்மாவதி, பள்ளி செயலர் ராஜ்குமார், தலைமையாசிரியர் குப்புச்சாமி ஆகியோர் பாராட்டினர்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai