Enable Javscript for better performance
கொடைக்கானலில் அருவிகளில் நீர்வரத்து தொடங்கியது- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் அருவிகளில் நீர்வரத்து தொடங்கியது

    By கொடைக்கானல்,  |   Published on : 12th May 2014 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானலில் பெய்த மழையின் காரணமாக அருவிகளில் நீர்வரத்து தொடங்கியுள்ளது.

    கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து சீசன் தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக மழை பெய்தது. இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை பகல் நேரங்களில் மேகமூட்டமும், பிற்பகலில் பரவலாக சாரலும் தூறியது. அதனைத் தொடர்ந்து 30-நிமிடம் மழை பெய்தது. இந்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவியது. மேலும் வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, வட்டக்கானல் அருவி, செண்பகா அருவி, ஃபேரிபால்ஸ் அருவி ஆகிய நீர்வரத்து அருவிகளில் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது.

    கடந்த சில தினங்களாக பெய்த மழையால் பிரையண்ட் பூங்காவில் மலர்க் கண்காட்சிக்காக பூத்திருந்த பூக்கள் சற்று குறைந்துள்ளன. சேதமடைந்த பூக்களை அகற்றி, கூடுதல் பராமரிப்பு செய்ததால் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடிய ஏராளமான வண்ண மலர்கள் மேலும் பூத்துக் குலுங்குகின்றன.

    இதமான சீதோஷ்ண நிலையில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி, சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா இடங்களில் கழிப்பறை வசதியில்லாததால் சுற்றுலா இடங்களையே பொதுக் கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அப் பகுதிகளில் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பூங்காசாலை, ஏரிச்சாலை, கோக்கர்ஸ் வாக் சாலை ஆகியப் பகுதிகளில் சீசனை முன்னிட்டு நடமாடும் கழிப்பறை வசதியாவது ஏற்பாடு செய்யவேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையாகும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai