கொடைக்கானலில் விவசாய பணிகள் தொடக்கம்
By கொடைக்கானல் | Published on : 12th May 2014 12:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கொடைக்கானலில் பெய்த மழையின் காரணமாக விவசாயப் பணிகளை தொடங்கியுள்ளனர்.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து தொடங்கியுள்ளது. இதையடுத்து செண்பகனூர், பிரகாசபுரம்,ஐயர்கிணறு, வில்பட்டி, அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உழவு செய்தல், உருளைக் கிழங்கு நடுதல், பீன்ஸ், கேரட், முள்ளங்கி விதை நடுதல், மற்று பழனி, மே 11: பழனி அருகே நெய்க்காரபட்டி கிரசென்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மேல்நிலைப் பொதுத்தேர்வில் நூறு சதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
பழனி அருகே நெய்க்காரபட்டியில் கிரசென்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது வெளியான மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வில் இப்பள்ளி நூறு சதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் அனைவருமே 60சதம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவர் லோகேஸ்வரன் 1008 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவர் இன்ஜமாம் 961 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவி நித்யஸ்ரீ 935 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளர் ராஜ்குமார், முதல்வர் சித்ரா ராஜ்குமார் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.