Enable Javscript for better performance
கொடைக்கானல் கோடை விழா போட்டிகள்: ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானல் கோடை விழா போட்டிகள்: ஆலோசனைக் கூட்டம்

    By கொடைக்கானல்  |   Published on : 12th May 2014 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு குதிரை, சைக்கிள் போட்டிகள் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கொடைக்கானலில் வரும் 24-இல் கோடை விழா தொடங்குகிறது இதனைத் தொடர்ந்து பிரையண்ட் பூங்காவில் மலர்க் கண்காட்சியும் அதனைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகளும் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து குதிரைப் போட்டி சைக்கிள் போட்டிகள் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ.ராமசாமி தலைமை வகித்தார். வட்டாட்சியர் குணசேகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கொடைக்கானல் ஏரிச்சாலை, பூங்கா சாலை, அப்சர்வேட்டரி ஆகிய பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் கடைகள் வைக்க கூடாது என்றும்,சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் நடந்து கொள்ள வேண்டுமென ஆலோசனை வழங்கப்பட்டது.

    மேலும் கோடைவிழாவை முன்னிட்டு குதிரை, சைக்கிள் போட்டி நடத்துவது குறித்தும்

    அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கவும் சுற்றுலா இடங்களுக்கு செல்வதற்கு அதற்குரிய அடையாளமாக பதாகைகள் வைப்பது குறித்தும் பேசப்பட்டது.

    இக் கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் கருணாகரன், கொடைக்கானல் ஹோட்டல், ரிசார்ட் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், குதிரை ஓட்டுநர்கள், சைக்கிள் கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சுற்றுலா அலுவலர் குணசேகரன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai