Enable Javscript for better performance
கோடை மழையால் மாம்பழங்களில் நீர்ச்சத்து கூடும்: விவசாயிகள் மகிழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    கோடை மழையால் மாம்பழங்களில் நீர்ச்சத்து கூடும்: விவசாயிகள் மகிழ்ச்சி

    By நத்தம்,  |   Published on : 12th May 2014 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நத்தம் பகுதிகளில் பெய்த கோடை மழையால் மாம் பழங்களில் நீர்ச்சத்து கூடும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    கடந்த ஆண்டு போதிய இல்லை. இதனால் கடந்த 3 மாதங்களாக நத்தம் பகுதியில் கடும் வறட்சி நிலவியது. இதனால் மா மரங்கள் பாதிக்கப்பட்டன. மேலும் ஒருசில மரங்கள் நல்ல பருவத்தில் இருந்த போதும் பலன் தரும் நிலையில் காய்ந்து பட்டுப் போனது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். அவற்றைக் காப்பாற்ற ஆழ்துளை கிணறுகள் அமைத்தும் நீர் கிடைக்கவில்லை. இதனால் லாரிகளில் நீரை விலைக்கு வாங்கி மரங்களுக்கு பாய்ச்சி காப்பாற்றி வந்தனர்.

    வறட்சி காரணமாக மாம் பிஞ்சுகள் போதிய நீர்ச்சத்து இன்றி காணப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் தொடர்ந்து பெய்த சாரல் மழையால் மரங்களில் நீர்ச்சத்து பெருக்கம் அடைய வாய்ப்புள்ளது. இதனால் நீர்ச்சத்து அதிகமாகி எடை அதிகரிக்கும்.

    இதுகுறித்து மா விவசாயி சுப்பிரமணியன் கூறியதாவது: மழை இன்மையால் மா மரங்களில் போதிய பெருக்கம் இன்றியும் நீர்ச்சத்து இல்லாமலும் மாங்காய்கள் காணப்பட்டன. கடந்த வாரம் பெய்த சாரல் மழையால் நீர்ச்சத்து கூடியதுடன் எடையும் அதிகரித்துள்ளது. இவை சுமார் 250 கிராம் எடையில் காணப்பட்ட மாங்காய்கள் கணிசமாக 150 கிராம் வரை எடை கூடி 400 கிராம் வரை வர வாய்ப்புள்ளது. இது கவலையில் இருந்த விவசாயிகளுக்கு ஆறுதலாக உள்ளது. இருப்பினும் முற்றிலும் மரங்கள் வறட்சியிலிருந்து விடுபட தொடர்ந்து பலத்த மழை பெய்ய வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai