Enable Javscript for better performance
தேங்காய் திருட்டு: வழக்குப் பதிவு- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூர் மாவட்டம் உடுமலை காந்திநகர் கந்தவேல் லே-அவுட்டைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் (56). இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி பாப்பம்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன், அவரது தாயார் மல்லிகா, ஆறுமுகம் மற்றும் சிலர் டிராக்டர் மற்றும் மினி லாரியில் நெல்லிக்காய், தேங்காய்களை பறித்துச் சென்றார்களாம். இதைத் தட்டிக்கேட்ட ஜனார்த்தனனுக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனார்த்தனன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai