Enable Javscript for better performance
மொழிப் பாடத்தில் தமிழ் இல்லாததால் 2ஆம் இடத்தை இழந்த மாணவி- Dinamani

சுடச்சுட

    

    மொழிப் பாடத்தில் தமிழ் இல்லாததால் 2ஆம் இடத்தை இழந்த மாணவி

    By திண்டுக்கல்  |   Published on : 12th May 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மொழிப்பாடமாக தமிழை தேர்வு செய்யாததால், மாவட்ட அளவில் 2ஆம் இடம் பெறும் வாய்ப்பினை திண்டுக்கல் மாணவி இழந்துள்ளார்.

    பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம். மெட்ரிக். பள்ளி மாணவி ஆர்.ஷ்ருதி 1185 மதிப்பெண்கள் பெற்றார். இதன் மூலம் மாவட்ட அளவில் 2ஆம் இடம் பெறுவதற்கான வாய்ப்பு, மொழிப்பாடமாக பிரஞ்ச் தேர்வு செய்ததால் கிடைக்காமல் போனது.

    இதுகுறித்து அவரிடம் தினமணி செய்தியாளர் கேட்டபோது: எனது தாய்மொழி தெலுங்கு. அதனால் தமிழை மொழிப்பாடமாக தேர்வு செய்யாமல், பிரஞ்ச் படித்தேன். இதன் காரணமாக மாவட்ட அளவில் கிடைக்க வேண்டிய 2ஆம் இடம் பறிபோனதில் வருத்தம் உள்ளது. எனது விருப்பம் மருத்துவத் துறையில் சிறந்த விளங்க வேண்டும் என்றார்.

    தந்தை ரவிச்சந்திரன் வியாபாரம் நடத்தி வருகிறார். தாய் ஜெயஸ்ரீ இல்லத்தரசி. பாடவாரியாக இவர் பெற்றுள்ள மதிப்பெண் விவரம்:

    பிரென்ச்- 197, ஆங்கிலம் - 191, இயற்பியல் - 200, வேதியியல் - 200, உயிரியல் - 199, கணிதம் - 198. மொத்தம் 1185 மதிப்பெண்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai