Enable Javscript for better performance
கொடைக்கானல் மலைச் சாலையில் பாறை உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானல் மலைச் சாலையில் பாறை உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

    By கொடைக்கானல்  |   Published on : 13th May 2014 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானல் மலைச் சாலையில் பாறை உருண்டு விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

     கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக மழைபெய்து வந்தது. இந் நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலையில் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பெருமாள்மலை, வடகரைப்பாறை, மயிலாடும்பாறை, மச்சூர் ஆகிய பகுதிகளிலும், பேரிஜம், பில்லர் ராக் உள்ளிட்ட வனப் பகுதிகளிலும் மழை பெய்தது.

    இந்த மழையால் திங்கள்கிழமை கொடைக்கானல்-மதுரை மலைச் சாலையான மயிலாடும்பாறை அருகே பாறை உருண்டு விழுந்தது. இதனால் அப் பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

      கொடைக்கானல் நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் பாறையை அகற்றினர்.

      கொடைக்கானல் உகார்த்தே நகர்ப் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பழமையான மரம் விழுந்ததில் கொடைக்கானல்-பழனி, வத்தலக்குண்டு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

      சம்பவ இடத்தில் பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போக்குவரத்து சீரானது.

      கொடைக்கானல்-மதுரை, பழனி மலைச்  சாலைகளில் 30-கி.மீ தூரத்துக்கு இரு புறங்களிலும் அபாயகரமான மரங்கள் இருந்து வருகின்றன மழைக் காலங்களிலும், காற்று வீசத் தொடங்கிய காலங்களிலும் மரங்கள் விழுந்து வருகின்றன. 

    தற்போது சீசன் தொடங்கியுள்ளதால், அதிகமான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வருகின்றனர்.

     எனவே, பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன் மலைச்சாலைகளிலுள்ள ஆபத்தான மரங்களை அகற்ற வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது வாகன ஓட்டுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai