Enable Javscript for better performance
திண்டுக்கல் அரசு மருத்துவர் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் அரசு மருத்துவர் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை

    Published on : 14th May 2014 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவரின் வீடு மற்றும் கிளினிக்கில் வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை நடத்தினர்.

      திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றுபவர் டி.சுரேஷ்பாபு. பொது அறுவைச் சிகிச்சை நிபுணரான இவருக்கு திண்டுக்கல்-பழனி சாலையில் தனியாக கிளினிக் மற்றும் வீடு உள்ளது. லேப்ராஸ்கோபிக் அறுவைச் சிகிச்சையில் இவரது கிளினிக் பிரபலமானது.  இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை மதுரை வருவாய்த் துறை புலனாய்வுப் பிரிவு ஆணையர் ஐயம்பெருமாள் தலைமையிலான 9 அதிகாரிகள் அடங்கிய குழு, சுரேஷ்பாபுவின் கிளினிக் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தினர். நள்ளிரவு 12 மணி வரையிலும் சோதனை நீடித்தது. இந்தச் சோதனையின் முடிவில் ஆவணங்களை அதிகாரிகள்  கைப்பற்றி எடுத்துச் சென்றதாகத் தெரியவருகிறது. இந்த ஆவணங்கள் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்திவருவதாகவும் தெரிய வருகிறது.    

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai