Enable Javscript for better performance
நத்தம் பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    நத்தம் அருகே குட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரமோகன், தையல் தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயபிரபா (32). இவர், கடந்த 2 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.   இந்நிலையில், ஜெயபிரபா தனக்குத் தானே உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். ஆபத்தான நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

      நத்தம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் மாதவன், கொட்டகை அமைக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி சரசுவதி (29). இவர், கடந்த 8ஆம் தேதி வீட்டில் மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்தபோது, தீப்பற்றி பலத்த காயம் அடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.   தொடர்ந்து, நத்தம் அருகே கோமணாம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா என்ற பாரதிராஜா (32). குடிப்பழக்கம் உள்ள இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததால், தென்னை மரத்துக்குப் பயன்படுத்தும் விஷ மாத்திரைகளை விழுங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆபத்தான நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

       வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த 3 சம்பவங்கள் குறித்து, நத்தம் போலீஸார்ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai