Enable Javscript for better performance
நிலக்கடலை விதைப்பு பணி துவக்கம்- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் கடந்த 4ஆம் தேதி முதல் கோடைமழை தொடர்ந்து பெய்து வருவதை அடுத்து, நிலக்கடலை விதைப்பு பணி துவங்கப்பட்டுள்ளது.

      நத்தம் வட்டாரத்தில் உள்ள சாத்தம்பாடி, கோமணாம்பட்டி, லிங்கவாடி, மலையூர், காசம்பட்டி, செந்துரை, மணக்காட்டூர், சிறுகுடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் நிலக்கடலை விதை பருப்பு விதைக்கும் பணி தற்போது ஆங்காங்கே தொடங்கப்பட்டுள்ளது.

      இதில், கம்பெனி மோட்டா ரகம் ஒரு படி ரூ. 140-க்கும், அதே ரகம் ஒரு கிலோ ரூ.120-க்கும், மோரிஸ் ரகம் ஒரு கிலோ ரூ.130-க்கும், மூன்று விதை மோரிஸ் நிலக்கடலை விதை பருப்பு ரூ.130-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை, நத்தத்தில் வந்து விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai