Enable Javscript for better performance
வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை, ரூ. 53 ஆயிரம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை, ரூ. 53 ஆயிரம் திருட்டு

    By dn  |   Published on : 14th May 2014 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் எலக்ட்ரிக்கல் கடை வைத்திருப்பவர் காஜாஉசேன் (41). இவர், ஒட்டன்சத்திரம் இ.பி. நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவர் திங்கள்கிழமை தனது குடும்பத்துடன் செம்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது, மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவை உடைத்து 30 பவுன் நகைகள் மற்றும் ரூ. 53 ஆயிரம் பணத்தைச் திருடிச் சென்றுவிட்டனர்.   உறவினர் கொடுத்த தகவலின்பேரில் வீட்டுக்கு வந்த காஜாஉசேன், ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai