Enable Javscript for better performance
அனுமதியின்றி மது விற்பனை- Dinamani

சுடச்சுட

    

    பழனி அருகே அனுமதியின்றி சில்லறையில் மது விற்பனை செய்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    பழனி தாலுகா போலீஸார் திங்கள்கிழமை ரோந்துப்பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது, அழகாபுரி மதுபானக்கடை அருகே அதே ஊரிலுள்ள கணேஷ் நகர் காலனியை சேர்ந்த மருதகாளி மகன் கிருஷ்ணன் (43) என்பவர் அனுமதியின்றி சில்லறையில் மதுவிற்பனை செய்தது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து, அவரைப் பிடித்த போலீஸார், அவர் மீது வழக்குப் பதிந்தனர். பின்னர், அவரிடம் இருந்த 58 பிராந்தி, பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai