Enable Javscript for better performance
கார் விபத்தில் காவலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் அருகே நடந்து சென்றவர் மீது கார் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    திண்டுக்கல் பெரிய பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் வெ. முத்துக்கிருஷ்ணன் (58). புதுப்பட்டி சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இரவு காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது உறவினர் முருகேசன் என்பவருடன் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். மதுரை-சேலம் நான்குவழிச் சாலையில் நடந்து சென்றபோது, மதுரை நோக்கிச் சென்ற கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்துக்கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்துக் குறித்து, திண்டுக்கல் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai