Enable Javscript for better performance
கொடைக்கானலில் சாலைகளை சரி செய்ய சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் சாலைகளை சரி செய்ய சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

    By கொடைக்கானல்  |   Published on : 15th May 2014 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானலில் மலைச்சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

    கொடைக்கானலில் பல இடங்களில் மலைச் சாலைகள் அகலப்பபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில் அதிகமாக வாகனங்கள் வருவதால், வாகனங்களை நிறுத்த முடியாமல் வாகன ஓட்டுநர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் சுற்றுலா இடங்களான ஏரிச்சாலை, ஃபைன்பாரஸ்ட், மோயர் பாயிண்ட்,பில்லர் ராக், பசுமைப் பள்ளத்தாக்கு, குணாகுகை உள்ளிட்ட இடங்களில் வெகுநேரமாக காத்திருக்க வேண்டியிருப்பதால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.இந் நிலையில் சாலையோரங்களில் திடீரென கடைகள் அதிகரித்துள்ளதாலும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    எனவே சீசன் காலங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாலைகளில் தோண்டப்பட்ட பகுதிகள் சரி செய்யப்படாமல் இருப்பதால், சுற்றுலா வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன. இவற்றைத் தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து சாலைகளை சீரமைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai