Enable Javscript for better performance
கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றிய ஓட்டுநர் தலைமறைவு- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றிய ஓட்டுநர் தலைமறைவு

    By கொடைக்கானல்  |   Published on : 15th May 2014 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானலில் சுற்றுலா இடங்களை சுற்றிக் காட்டுவதாக பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய சுற்றுலா வாகன ஓட்டுநர் தலைமறைவாகியுள்ளார்.

    சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 7-பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். திங்கள்கிழமை கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் டிராவல்ஸில் பணிபுரியும் ஓட்டுநர் கார்த்திக் என்பவரிடம் கொடைக்கானலில் உள்ள இடங்களை சுற்றிப் பார்ப்பதற்கு ரூ2,400-பேசி, முன்பணமாக ருபாய் ஆயிரம் கொடுத்துள்ளனர். கார்த்திக் பணத்தை பெற்றுக் கொண்டு நீண்ட நேரமாகியும் சுற்றிப் பார்க்க கல்லூரி மாணவர்களை வாகனத்தில் அழைத்துச் செல்ல வரவில்லையாம்.இந்த நிலையில், கல்லூரி மாணவர்கள் கார்த்திக்கிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்களை மிரட்டியுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து சுற்றுலா வந்த கல்லூரி மாணவர் உதயக்குமார் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் செய்ததன்பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப் பதிவு செய்துள்ளார். தலைமறைவாகியுள்ள கார்த்திக்கை காவல் துறையினர் தேடி வருகின்ற

    னர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai