Enable Javscript for better performance
கொடைக்கானல் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா இடங்களில் உள்ள கழிப்பறைகளை சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. சுற்றுலா இடங்களான ஏரிச்சாலை, பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லர்ராக் உள்ளிட்ட இடங்களில் கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வசதி, சுத்தப்படுத்த உபயோகப்படுத்தப்படும் பொருட்கள் உள்ளனவா என கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் ராமசாமி பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணி, கொடைக்கானல் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் அசன் முகமது, துரைப்பாண்டி, கிராம நிர்வாக அலுவலர் பட்டத்தய்யன் ஆகியோரும் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். இதனைத் தொடர்ந்து நகராட்சி அலுவலகம் முன் கட்டப்பட்டுள்ள கழிப்பறையில் சுமார் ரூ. 5 லட்சம் செலவில் நவீன சாதனங்கள் அமைக்கப்பட்டு இந்த கழிப்பறை புதன்கிழமை (மே 14) முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

    மேலும் நம் கழிப்பறை என்ற திட்டம் மூலம் 10-கழிப்பறைகளும் சுற்றுலா இடங்களில் வைக்கப்பட உள்ளன. சீசனை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு பெற்று 60 துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தற்போது நகரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பிளாஸ்டிக் பைகள், பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. புகையிலை மற்றும் பான்பராக், குட்கா ஆகியவற்றை வணிகர்கள் யாரும் விற்பனை செய்வதோ, பயன்படுத்தவோ கூடாது என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் சுகாதார ஆய்வாளர் அசன் முகமது தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai