Enable Javscript for better performance
திண்டுக்கல் அரசு மருத்துவர் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் அரசு மருத்துவர் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை

    By திண்டுக்கல்  |   Published on : 15th May 2014 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவரின் வீடு மற்றும் கிளினிக்கில் வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை நடத்தினர்.

    திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றுபவர் டி.சுரேஷ்பாபு. பொது அறுவைச் சிகிச்சை நிபுணரான இவருக்கு திண்டுக்கல்-பழனி சாலையில் தனியாக கிளினிக் மற்றும் வீடு உள்ளது. லேப்ராஸ்கோபிக் அறுவைச் சிகிச்சையில் இவரது கிளினிக் பிரபலமானது. இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை மதுரை வருவாய்த் துறை புலனாய்வுப் பிரிவு ஆணையர் ஐயம்பெருமாள் தலைமையிலான 9 அதிகாரிகள் அடங்கிய குழு, சுரேஷ்பாபுவின் கிளினிக் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தினர். நள்ளிரவு 12 மணி வரையிலும் சோதனை நீடித்தது. இந்தச் சோதனையின் முடிவில் ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றதாகத் தெரியவருகிறது. இந்த ஆவணங்கள் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்திவருவதாகவும் தெரிய வருகிறது.

    நத்தம் பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் சாவு

    நத்தம் அருகே குட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரமோகன், தையல் தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயபிரபா (32). இவர், கடந்த 2 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெயபிரபா தனக்குத் தானே உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். ஆபத்தான நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    நத்தம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் மாதவன், கொட்டகை அமைக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி சரசுவதி (29). இவர், கடந்த 8ஆம் தேதி வீட்டில் மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்தபோது, தீப்பற்றி பலத்த காயம் அடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து, நத்தம் அருகே கோமணாம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா என்ற பாரதிராஜா (32). குடிப்பழக்கம் உள்ள இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததால், தென்னை மரத்துக்குப் பயன்படுத்தும் விஷ மாத்திரைகளை விழுங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆபத்தான நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த 3 சம்பவங்கள் குறித்து, நத்தம் போலீஸார்ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை, ரூ. 53 ஆயிரம் திருட்டு

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் எலக்ட்ரிக்கல் கடை வைத்திருப்பவர் காஜாஉசேன் (41). இவர், ஒட்டன்சத்திரம் இ.பி. நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவர் திங்கள்கிழமை தனது குடும்பத்துடன் செம்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது, மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவை உடைத்து 30 பவுன் நகைகள் மற்றும் ரூ. 53 ஆயிரம் பணத்தைச் திருடிச் சென்றுவிட்டனர். உறவினர் கொடுத்த தகவலின்பேரில் வீட்டுக்கு வந்த காஜாஉசேன், ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai