Enable Javscript for better performance
பழனியில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பழனியில் வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கும், அலுவலர்களுக்கும் 3 நாள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை துவங்கியது.

    தமிழக அரசு வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு காலமுறைக்கேற்ப சாகுபடி செய்ய ஏற்ற பயிர்கள், தானியங்கள் குறித்தும், பொருள் ஈட்டும் முறை குறித்தும் அவ்வப்போது முகாம்கள் அமைத்து விளக்கி வருகிறது. பழனி- திண்டுக்கல் சாலை பிஏஎஸ் ஹாலில் பழனி வேளாண்துறை நீர்வள, நிலவளத் திட்டத்தின் கீழ் அமராவதி உப வடிநீர் பகுதி விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் மற்றும் விவசாய அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை துவங்கியது. முகாமில் ஏராளமான விவசாயிகளும், விவசாய அலுவலர்களும் பங்கேற்றனர். விவசாயத்துக்கு தண்ணீரின் அவசியம், தற்போதுள்ள நிலையில் தண்ணீரை சிக்கனமாக கையாளுதல், குறைந்த தண்ணீரை கொண்டு மகசூலை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு விளக்கங்களுடனும் படக்காட்சிகளுடனும் விளக்கப்பட்டது. முகாமில் பழனி வேளாண்மை உதவி இயக்குநர் சாந்தாமணி வரவேற்றார். திண்டுக்கல் வேளாண்மை இணை இயக்குநர் சம்பத்குமார், துணை இயக்குநர் தங்கச்சாமி ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்ற முகாமில் சென்னை தொழில்நுட்ப பயிற்றுநர்கள் நடராஜன், ரவீந்திரன் உள்ளிட்டோர் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர்.

    புதன்கிழமை, வியாழக்கிழமையும் விவசாய அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai