Enable Javscript for better performance
பழனி பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பழனி பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

    By பழனி,  |   Published on : 15th May 2014 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனி அருள்மிகு இலக்குமி நாராயணப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயில் அருள்மிகு இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலாகும். இக்கோயிலில் கடந்த மே 5ஆம் தேதி சித்திரைத் திருவிழா திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு, தினமும் சுவாமி சப்பரம், சேஷ வாகனம், தங்கக் குதிரை வாகனம், அனுமார் வாகனம், தோள்கன்னி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.

    முக்கிய நிகழ்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை சித்திரைத் திருவிழா திருத்தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை 5.30 மணிக்கு தோள்கன்னியில் சுவாமி தேரேற்றம் செய்யப்பட்ட பின்னர், காலை 7.35 மணி அளவில் திருத்தேர் வடம்பிடித்தல் நடைபெற்றது. முன்னதாக, அருள்மிகு இலக்குமி சமேதர் நாராயணருக்கு சிறப்பு அர்ச்சனைகள், தீபாராதனைகள் நடத்தப்பட்டன. தேர் நான்கு ரத வீதிகளில் உலா வந்து நிலையை அடைந்ததும், பக்தர்கள் கோவிந்தா, நாராயணா என கோஷங்கள் எழுப்பினர்.

    பூஜைகளை, திருவள்ளரை கோயில் வாசுதேவ பட்டர் தலைமையில் வரதராஜ அய்யங்கார், வெங்கட்ராம அய்யங்கார், சீனிவாசன் அய்யங்கார், கார்த்திக் அய்யங்கார் உள்ளிட்டோர் செய்திருந்தனர். புதன்கிழமை சிறப்பு பூஜைகளுடன் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது. தேரோட்ட நிகழ்ச்சியில், பழனி கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, பேஷ்கார் ராமலிங்கம், காண்ட்ராக்டர் நேரு மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai