Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில் தேர்ச்சி விகிதம் குறைவு ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டார் ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பள்ளியில் தேர்ச்சி விகிதம் குறைவு ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டார் ஆட்சியர்

    By திண்டுக்கல்  |   Published on : 16th May 2014 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் விளக்கம் கேட்டுள்ளார்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பிளஸ்2 மதிப்பெண் பட்டியல் பதிவு செய்வதற்கான பயிற்சி அளிக்கும் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் பெண்கள் அரசினர் மகளிர் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில், முற்பகலில் பழனி கல்வி மாவட்டத்துக்கும், பிற்பகலில் திண்டுக்கல் கல்வி மாவட்டத்துக்கும் பயிற்சி வழங்கப்பட்டது.

    பிளஸ்2 மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கியவுடன், இணைய தள வசதியுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கிய அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே. சுகுமார் தேவதாஸ் அறிவுரை வழங்கினார்.

    அப்போது அவர் தெரிவித்தது: தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கிய பள்ளிகள், அடுத்த கல்வியாண்டில் அதிக தேர்ச்சிபெறுவதற்கான வழிமுறைகளை செயல்படுத்த வேண்டும். அதேபோல் விளையாட்டு மற்றும் கலாசாரப் போட்டிகளிலும் அரசு பள்ளிகளின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற வேண்டும்.

    ஜூன் 2 ஆம் தேதி 2014-15 கல்வியாண்டிற்கான வகுப்புகள் தொடங்குவதற்குமுன் பள்ளிகளில் மராமத்துப் பணிகளை முடித்து வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினார்.

    ஆட்சியர் அறிவுரை: பின்னர் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்கள் 15 பேர் மாவட்ட ஆட்சியரின் அழைப்பின் பேரில், அவரை சந்திக்கச் சென்றனர். அவர்களிடம் பேசிய ஆட்சியர், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு விளக்கம் அளிக்குமாறு அவர்களிடம் கேட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai