Enable Javscript for better performance
இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    இஸ்லாமியர்கள் மனம் புண்படும்படி துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்ததாக, இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பழனியில் கடந்த மார்ச் 4ஆம் தேதி, இந்து முன்னணி சார்பில் இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்தும், பழனி திருக்கோயில் நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது, இஸ்லாமியர்கள் மனம் புண்படுமாறு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டதாம்.

    இது குறித்து, கோட்டை மேட்டுத் தெருவைச் சேர்ந்த பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா நகரச் செயலர் ஆசிக் ராஜா, மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

    நீதிமன்ற உத்தரவின்பேரில், இந்து முன்னணி மாவட்டச் செயலர் ஜெகன், கனகராஜ், மாவட்டப் பொதுச் செயலர் கோட்சே கருப்புச்சாமி, நகர நிர்வாகிகள் கேசவன், பாலன், ஆழ்வார், மலை கோயில் பக்தர் பாதுகாப்பு பேரவை செந்தில் உள்ளிட்டோர் மீது, நகர போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai