Enable Javscript for better performance
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர கோரிக்கை

    By திண்டுக்கல்  |   Published on : 16th May 2014 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் புதிதாக உருவாகவுள்ள மத்திய அரசு மாற்றம் கொண்டு வரவேண்டும் என, தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத் தொழில் வர்த்தக சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் டி. கிருபாகரன் தலைமை வகித்தார். கௌரவத் தலைவர் இஎன். பழனிச்சாமி முன்னிலை வகித்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.

    இதில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டம் 2006இல், மத்தியில் புதிதாக அமையவுள்ள அரசு முழுமையாக மாற்றம் செய்யவேண்டும். சில்லறை வணிகத்தில் அன்னிய நிறுவனங்களை அனுமதிக்க முடியாது என்பதை அறிவிக்கும் வகையில், மக்களவையில் சட்டம் கொண்டு வரவேண்டும். சேவை வரி, வருமான வரி சட்டங்களை எளிமைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில், மாவட்டச் செயலர் சி. அழகு, பொருளாளர் எஸ். முகமது கனி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai