Enable Javscript for better performance
ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 2 நாள் பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 2 நாள் பயிற்சி முகாம்

    By பழனி,  |   Published on : 16th May 2014 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை துவங்கியது.

    ஒன்றிய அலுவலகக் கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, உதவித் திட்ட அலுவலர் (மகளிர்) அசோகன் தலைமை வகித்தார். உதவித் திட்ட அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தார். பழனி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சுப்ரமண்யம் வரவேற்புரை வழங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(சிறுசேமிப்பு) சக்ரியாஸ், மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பாண்டியம்மாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    முகாமில், கிராம வறுமை ஒழிப்பு சங்க பிரதிநிதிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில், புத்தகங்களை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. பயிற்சிகளை, உதவித் திட்ட மேலாளர் ரங்கராஜன் உள்ளிட்ட பலர் வழங்கினர். நிகழ்ச்சியின்போது, இளைஞர் திறன் வளர்ப்பு பயிற்சியின் கீழ் அங்கீகாரம் பெற்ற பழனிகுமார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியிலிருந்து ஓட்டுநர் பயிற்சி பெற்ற 25 நபர்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டன.

    இது குறித்து, உதவித் திட்ட அலுவலர்கள் அசோகன், முருகேசன் ஆகியோர் தெரிவித்தது: ஊரக வாழ்வாதார இயக்கத்தில் இளைஞர் திறன்வளர்ப்புப் பயிற்சியின் மூலம் இளைஞர்கள் அரசு வேலையை எதிர்பாராமல், தாமாக முன்வந்து தனியார் நிறுவனங்களில் வேலை பெறும் விதமாக ஓட்டுநர் பயிற்சி, கணினிப் பயிற்சி, தையல் பயிற்சி, சமையற்கலை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை, மாவட்டம் முழுக்க இலவசமாக வழங்கி வருகிறது.

    இதில் பங்கேற்க விரும்புவோர், மாவட்ட திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்), வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஆகியோரை தொடர்பு கொண்டு விவரம் பெறலாம் எனத் தெரிவித்தனர். நிகழ்ச்சியில், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai