Enable Javscript for better performance
கொடைக்கானலில் கோடை விழா: 25, 26இல் மலர்க் கண்காட்சி - Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் கோடை விழா: 25, 26இல் மலர்க் கண்காட்சி

    By கொடைக்கானல்  |   Published on : 16th May 2014 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு, மலர்க் கண்காட்சி மற்றும் படகுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

    கோடை விழாவையொட்டி, பிரையண்ட் பூங்காவில் மலர்க் கண்காட்சி மே 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதற்காக, பூங்காவில் 86 வகையான மலர்ப் பாத்திகள் அமைக்கப்பட்டு, 3 லட்சத்துக்கும் அதிகமான மலர் நாற்றுகளில் ரோஜா, கல்ரோஜா, ஆரனத்தி கோலம், ஆந்தேரியம், டையேந்தஸ், பேன்சி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

    இவற்றை, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர். இவை தவிர, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், புல்வெளிகள், சிறுவர் பூங்கா, இசை நடன நீருற்று போன்றவையும் பராமரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

    கோடை விழாவை முன்னிட்டு, படகு குழாம் சார்பில் 24ஆம் தேதி படகுப் போட்டியும் தொடங்குகிறது. எனவே, படகுகளை பராமரிப்பது, பெயிண்ட் மற்றும் பெடல்களுக்கு கிரீஸ், துடுப்புகளுக்கு கைப்பிடி, இருக்கைகள் சரிசெய்வது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இது குறித்து, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் சின்ராசு கூறுகையில், கோடை விழாவை முன்னிட்டு 53ஆவது மலர்க் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் நடைபெறுகிறது. மேலும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், சிறப்பான அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 4 வகையான உருவங்கள் அமைக்கப்படுகின்றன என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai