Enable Javscript for better performance
செந்துறை அருகே வடகாட்டான் கோயில் திருவிழா: 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கறி விருந்து- Dinamani

சுடச்சுட

    

    செந்துறை அருகே வடகாட்டான் கோயில் திருவிழா: 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கறி விருந்து

    By நத்தம்,  |   Published on : 16th May 2014 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நத்தம் வட்டம், செந்துறை அருகே, கருத்தலக்கம்பட்டி, க.புதூர் ஆகிய கிராம மக்கள் சேர்ந்து, பிரசித்தி பெற்ற ஸ்ரீவடகாட்டான் சுவாமி கோயில் திருவிழாவை நடத்தினர்.

    3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்தத் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். அப்போது, கோயிலுக்கு காணிக்கையாக 200-க்கும் மேற்பட்ட கிடாக்களை கொண்டு வந்து விட்டுச் சென்றனர்.

    இந்த கிடாக்கள் அனைத்தையும் கோயில் முன்புறப் பகுதியில் வெட்டி சமைத்து விருந்து படைக்கப்பட்டது. இந்த விருந்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    இக் கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறுவதாகவும், அதுபோல பொருள்கள் காணாமல்போனால், இந்தக் கோயிலில் ஈடுபோட்டால் உடனே கிடைத்துவிடும் என்றும் கூறப்படுகிறது. வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் கிடாய், வாணவெடி உள்ளிட்டவற்றை காணிக்கையாகச் செலுத்தினர். பின்னர், திருவிழாவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இத் திருவிழாவைக் காண, வெளி மாவட்டங்களிலிருந்தும், சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் கலந்துகொண்ட

    னர்.

    விழா ஏற்பாடுகளை, கருத்தலக்கம்பட்டி, க.புதூர் கிராம மக்கள் செய்திருந்தனர். சுகாதாரம் மற்றும் தண்ணீருக்கான ஏற்பாடுகளை, கோசுகுசறிச்சி ஊராட்சி மன்றம் செய்திருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai