Enable Javscript for better performance
திருவிழாவில் மோதல்: 10 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பழனி அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில், 4 பேர் காயமடைந்தனர். இதில், 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

    நாயக்கர் தோட்டம் இந்திரா நகரில் உள்ள விநாயகர் கோயில் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின்போது, குடி போதையில் வந்து டியூப் லைட், மைக் செட்டை உடைத்ததாகவும், பூசாரி பழனிச்சாமி உள்ளிட்டோரை தாக்கியதாகவும், இருளப்பன் மகன் ஆனந்தகுமார் (28) புகார் தெரிவித்தார். அதன்பேரில், ராஜா, பெரியசாமி, சுரேஷ் மற்றும் முனியாண்டி ஆகியோரை பழனி தாலுகா போலீஸார் கைது செய்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிரபாகரன், நீலவாணன், காளீஸ்வரன் ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இது தவிர, கோயில் திருவிழாவுக்கு வரி தர மறுத்தவர்களை ஆபாசமாகப் பேசி தாக்கியதாகவும், இதைத் தடுத்த காளீஸ்வரன் என்பவரையும் தாக்கியதாகவும் தரப்பட்ட புகாரின்பேரில், கூம்பாறை வேலப்பன், செந்தில், ஆனந்தன், நடராஜன், குமார், மகுடீஸ்வரன் உள்ளிட்டோரையும் போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai