Enable Javscript for better performance
பழனியில் மாவட்ட இறகுப்பந்து போட்டிகள்பழனியில் மாவட்ட இறகுப்பந்து போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    பழனியில் மாவட்ட இறகுப்பந்து போட்டிகள்பழனியில் மாவட்ட இறகுப்பந்து போட்டிகள்

    By பழனி,  |   Published on : 16th May 2014 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனி அரிமா நகரில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டிகள் நடைபெற்றன.

    பழனி எஸ்ஜே விளையாட்டு சங்கம் சார்பில் அரிமா நகரில் உள்ள உள்ளரங்கத்தில் இரண்டு நாள் இறகுப்பந்து போட்டிகள் நடைபெற்றன. மாவட்ட அளவில் நடைபெற்ற இப்போட்டியில் ஏராளமான ஊர்களில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர். போட்டிகளை சங்கத் தலைவர் சுரேஷ், துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். செயலாளர் மோகன்குமார், துணைச் செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் முத்துச்சாமி வரவேற்றார். இரட்டையர் ஆட்டம், 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஜம்பிள்டு டபிள்ஸ் என இருவகையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலிடம் வரும் நான்கு பிரிவினருக்கு பரிசு வழங்கப்பட்டது. இரட்டையர் ஆட்டத்தில் தேனியைச் சேர்ந்த பகவதி, தங்கப்பாண்டி முதலிடமும், கோவையை சேர்ந்த வசந்த், நவீன் இரண்டாமிடமும், கோவை சிவா, வசந்த் மூன்றாமிடமும், பழனி பாலன், சுமைதீன் நான்காமிடமும் பெற்றனர். ஜம்பிள்டு டபிள்ஸ் ஆட்டத்தில் காரைக்குடி பகவதி, அக்பர் முதலிடமும், பழனி சுரேஷ், பாலன் இரண்டாமிடமும், கோவை ஷியாம், அர்ஜுண் மூன்றாமிடமும், பழனி நவீன், முத்துச்சாமி நான்காமிடமும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது. பரிசுகளை வழக்குரைஞர் மகேந்திரன், எஸ்ஜே ஸ்போர்ட்ஸ் சிவசங்கர், ஜூனியர் ரெட்கிராஸ் கன்வீனர் சின்ராஜ் உள்ளிட்ட பலர் வழங்கினர்.

    விழாவில் டாக்டர் சுதாகர், பாலமுருகன், பாண்டியராஜன், சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai