Enable Javscript for better performance
பிழையின்றி வினாத்தாள் தயாரிக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் போட்டித் தேர்வுகளுக்கான தேர்வு வினாக்களை பிழையின்றி தயாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரும் ஜூன் 14ஆம் தேதி 2343 விஏஓ காலி பணியிடங்களுக்கும், ஜூன் 29ஆம் தேதி 2846 குரூப் 2 பதவிக்கான காலி பணியிடங்களுக்கும், ஜூலை 20இல் 79 குரூப்1 பதவிகளுக்கான காலி பணியிடங்களுக்கும் தேர்வு நடத்தவுள்ளது.

    இந்தத் தேர்வுகளை அரசுப்பணி கனவில் இருக்கும் லட்சக்கணக்கான மாணவ, மாணவியர் எதிர்கொள்கின்றனர். ஆனால் இந்தத் தேர்வுகளில் சிறு சிறு பிழையுடன் வினாக்கள் தயாரிக்கப்படுகிறது.

    இந்த தவறு பலரையும் லட்சம் பேருக்கு பின்னால் தள்ளிவிடுகிறது. தவிர, தேர்வாணையம் வெளியிடும் விடைகளிலும் தவறுகள் இடம் பெறுகிறது.

    ஆகவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் காலதாமதம் ஆனாலும் சரியான விடைகளை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai