Enable Javscript for better performance
மனைவி தற்கொலை: கணவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பழனியில் வரதட்சிணைக் கொடுமை காரணமாக மனைவி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர் பிச்சை மைதீன். இவரது மகள் உம்மல் அன்னாத்துக்கும் (25), பழனி பெரியபள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த ஹபீப்ரகுமான் (33) என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தையும் உள்ளது. திருமணத்தின்போது, 25 பவுன் நகை வரதட்சிணைத் தருவதாகக் கூறி, 19 பவுன் நகை மட்டுமே போடப்பட்டுள்ளது. மீதி நகையை பின்னர் தருவதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால், பிச்சை மைதீன் தரமுடியாத நிலையில் இருந்துள்ளார்.

    இந்நிலையில், சில தினங்களுக்கு முன் உம்மல் அன்னாத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக, பிச்சை மைதீனுக்கு மருமகன் ஹபீப் ரகுமான் தகவல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து, பழனி டவுன் காவல் நிலையத்தில் தனது மகள் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக, பிச்சை மைதீன் புகார் தெரிவித்தார். விசாரணையில், உம்மல் அன்னாத்தை ஹபீப் ரகுமான் வரதட்சிணைக் கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்தது. இதையடுத்து, ஹபீப்பை போலீஸார் கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai