Enable Javscript for better performance
வெற்றி யாருக்கு? 22ஆவது சுற்றில் தெரியும்- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் வெற்றி யாருக்கு என்பது 22ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் தெரியவரும்.

    திண்டுக்கல் தொகுதியில் முக்கிய அரசியல் கட்சிகள் சார்பில் 6 பேர், சுயேச்சைகள் தரப்பில் 12 பேர் என மொத்தம் 18 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    தேர்தலுக்காக திண்டுக்கல், நத்தம், ஆத்தூர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1616 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 6 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் சேர்த்து 6,94,842 ஆண்கள், 7,30,861 பெண்கள், 107 இதரர் என மொத்தம் 13,98,810 வாக்காளர்களில் 10,82,059 பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.

    சட்டப்பேரவைத் தொகுதிகளில் பழனி 274, ஒட்டன்சத்திரம் 257, ஆத்தூர் 303, நிலக்கோட்டை 242, நத்தம் 286, திண்டுக்கல் 254 என மொத்தம் 1616 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் வாக்கு எண்ணும் பணிகளுக்கு தொகுதிக்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. நிலக்கோட்டை தொகுதியில் குறைந்தபட்சமாக 18 சுற்றுகளும், ஆத்தூர் தொகுதியில் அதிகபட்சமாக 22 சுற்றுகளும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதனைத் தொடர்ந்து மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குள் எண்ணப்பட உள்ளன.

    பலத்த போலீஸ் பாதுகாப்பு:

    வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரி வளாகத்தில் மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 21 பேர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 80 உள்பட 716 போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai