Enable Javscript for better performance
கடையை உடைத்து பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    பழனி அருகே பாலசமுத்திரம் 10வது வார்டு கடைவீதியை சேர்ந்தவர் சாகப்பமணியகாரன் மகன் கணேசன்(55). இவர் அடிவாரம் அருள்ஜோதி வீதியில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார். வியாழக்கிழமை கடையை அடைத்துவிட்டு சென்றவர் வெள்ளிக்கிழமை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பையில் வைத்திருந்த ரொக்கம் ரூபாய் நாற்பத்தெட்டாயிரத்தை மர்மநபர் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அடிவாரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரைத் தொடர்ந்து போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai