Enable Javscript for better performance
கொடைக்கானலில் அ.தி.மு.க.வெற்றி ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் அ.தி.மு.க.வினர் சார்பில் வெற்றி ஊர்வலம் நடைபெற்றது .

    திண்டுக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளராக அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட உதயக்குமார் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து கொடைக்கானலில் உள்ள அ.தி.மு.க.வினர் இனிப்புகளை வழங்கி பட்டாசு வெடித்து ஊர்வலம் நடத்தினர். கே.ஆர்.ஆர். கலையரங்கம் முன் தொடங்கி ஏரிச்சாலை, கிளப்சாலை, செவன்ரோடு, பேருந்து நிலையப் பகுதி, அண்ணாசாலை, கே.சி.எஸ்.திடல் வழியாக மூஞ்சிக்கல் பகுதியை ஊர்வலம் அடைந்தது.

    இந் நிகழ்ச்சியில் நகரச் செயலர் ஜான்தாமஸ், நகர்மன்றத் தலைவர்(பொறுப்பு)எட்வர்ட், மாவட்ட மருத்துவ அணிச் செயலர் இளம்வழுதி, அவைத் தலைவர் வெங்கட்ராமன், நகர கூட்டுறவு வங்கித் தலைவர் ஆரோக்கியசாமி, வீடுகட்டும் கூட்டுறவு சங்க தலைவர் நஜிபுதீன், துணைத் தலைவர் செல்வம், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கணேஷ், சிட்டி சுகைபு, கொடைக்கானல் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பொன்னுத்துரை,மற்றும் மகளிர் அணியினர்,வார்டு செயலர்கள்,பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai