Enable Javscript for better performance
திண்டுக்கல் அதிமுகவின் கோட்டை: 8வது முறையாக வென்று நிரூபணம்- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் அதிமுகவின் கோட்டை: 8வது முறையாக வென்று நிரூபணம்

    By திண்டுக்கல்  |   Published on : 17th May 2014 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் பகுதி அதிமுகவின் கோட்டை என்பது, 8ஆவது முறையாக கிடைத்துள்ள வெற்றியின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் கடந்த 2009 வரை நடைபெற்ற 16 தேர்தல்களில் (1973ல் நடைபெற்ற இடைத்தேர்தல் உள்பட), அதிகபட்சமாக அதிமுக 7, காங்கிரஸ் 5, திமுக 3, தமாகா ஒரு முறை என வெற்றியை பதிவு செய்திருந்தன.

    தற்போது நடைபெற்ற தேர்தலில் அதிமுக, திமுக, தேமுதிக உள்பட மொத்தம் 18 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் எம்.உதயகுமார், திமுக வேட்பாளர் எஸ்.காந்திராஜனைவிட வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

    அதிமுகவின் கோட்டையான திண்டுக்கல் தொகுதி:

    எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கிய போது, 1973ஆம் நடைபெற்ற திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் வேட்பாளர் எம்.மாயத்தேவர் முதல் முறையாக வெற்றி பெற்றார். அதன் மூலம் அதிமுகவின் தேர்தல் வரலாற்றில் முதல் வெற்றியை பதிவு செய்த தொகுதியான திண்டுக்கல், அதிமுகவின் கோட்டையாகவும் விளங்கியது.

    அதன் பின்னர் 6முறை அதிமுக வேட்பாளர்களுக்கு வெற்றியை வழங்கிய திண்டுக்கலில், தற்போது எம்.உதயகுமார் 1,27,845 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் திண்டுக்கல் தொகுதியில் அதிமுக 8ஆவது முûறாக வெற்றி பெற்றுள்ளது.

    34ஆண்டுகளுக்கு பின் போட்டியிட்ட திமுகவுக்கு 2ஆவது இடம்:

    கடந்த 1980ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு பின் திண்டுக்கல் தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி வந்த திமுக, சுமார் 34 ஆண்டுகளுக்குப் பின் இந்த தேர்தலில் அதிமுகவுடன் நேரடி போட்டியில் களம் இறங்கியது. திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.காந்திராஜன் 3,82, 617வாக்குகள் பெற்று 2ஆவது இடம் பெற்றார்.

    டெபாசிட் இழந்த 16 வேட்பாளர்கள்:

    திமுக வேட்பாளர் எஸ்.காந்திராஜனை தவிர்த்து, பிற அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். கடந்த 2009 தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் என்.எஸ்.வி.சித்தன், அதிமுக வேட்பாளர் பி.பாலசுப்பிரமணியை விட 54,347 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்தார். இந்த முறை தனியாக களம் இறங்கிய அவர், 35,632 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார்.

    அதேபோல் கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பி.முத்துவேல்ராஜ் 1,00,788 வாக்குகள் பெற்றிருந்தார். இந்த முறை பாஜக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட போதிலும் தேமுதிக வேட்பாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி 93,794 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை பறிகொடுத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai