Enable Javscript for better performance
பழனி கோயிலில் பஞ்சாமிர்தம் விலை உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தத்தின் விலை வெள்ளிக்கிழமை முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

    பழனி திருக்கோயிலின் முக்கிய பிரசாதமாகவும், மூலவர் அபிஷேகப் பொருளாகவும் கருதப்படுவது பஞ்சாமிர்தம். திருப்பதிக்கு லட்டு போன்று பழனி என்றால் பக்தர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் தெரியவருவது பஞ்சாமிர்தம் ஆகும்.

    மலை வாழைப்பழம், நெய், கரும்பு சர்க்கரை, பேரீச்சை, தேன் உள்ளிட்ட பொருள்களை கொண்டு பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. பழனி கோயிலில் பஞ்சாமிர்தம் முழுக்க, முழுக்க இயந்திரங்களால் கைபடாமல் தயாரிக்கப்படுகிறது. பழனி கோயிலின் பிரசாத விற்பனையிலும் பஞ்சாமிர்தம் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது.

    பழனி கோயில் பஞ்சாமிர்தம் கடந்த பல ஆண்டுகளாக விலை உயர்த்தப்படவில்லை. தற்போது மூலப்பொருள்கள் விலை உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, பஞ்சாமிர்த விலையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதன்படி, ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்து அரை கிலோ பஞ்சாமிர்த டப்பா தற்போது ரூ.30-க்கும், ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட அரை கிலோ நவீனரக டப்பா ரூ.35-க்கும் விற்கப்படுகிறது. மேலும், கால் கிலோ டப்பா அடங்கிய கிப்ட் பேக் ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது தற்போது ரூ.275-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai