Enable Javscript for better performance
பா.ஜ.க. சார்பில் வெற்றிக் கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் பா.ஜ.க. சார்பில் வெற்றி ஊர்வலம் நடைபெற்றது.

    மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கொடைக்கானலில் அக்கட்சி சார்பிலும்,இந்து முன்னணி சார்பிலும் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. நாயுடுபுரத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு டிப்போ, கலையரங்கம் பகுதி, ஏரிச்சாலை, செவன்ரோடு, கே.சி.எஸ்.திடல், அண்ணாசாலை, மூஞ்சிக்கல், லாஸ்காட் சாலை வழியாக அரசு மேல்நிலைப்பள்ளி வரை ஊர்வலமாக சென்றனர்.

    ஊர்வலத்தில் காங்கிரசுக்கு எதிராகவும்,நரேந்திரமோடியை வாழ்த்தியும் கோஷமிட்டுச் சென்றனர். இதனால் மூஞ்சிக்கல் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந் நிகழ்ச்சியில் பா.ஜ.க. தலைவர் மணி, நகர பொதுச் செயலர் ரஞ்சித், மாவட்ட பொதுக்குழு செயலர் அண்ணாத்துரை, நகர பொருளாளர் தட்சிணாமூர்த்தி, தர்மலிங்கம், கணேஷ் சண்முகநாதன், குமரன், நகரதுணைத் தலைவர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பா.ம.க.வினர் கொண்டாட்டம்: தர்மபுரி தொகுதியில் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கொடைக்கானலில் உள்ள பா.ம.க. வினர் மூஞ்சிக்கல் பகுதியில் இனிப்பு வழங்கி,வெடி வெடித்து கொண்டாடினர்.

    இந் நிகழ்ச்சியில் நகரச் செயலர் முருகன், மாநில சிறுபான்மை பிரிவு பொதுச் செயலர் சம்சுதீன், நகரத் தலைவர் சுப்பிரமணி, ஒன்றியத் தலைவர் சகாயராஜ், ஒன்றியச் செயலர் ரவிக்குமார், மாவட்ட துணைத் தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai