Enable Javscript for better performance
விவசாயிகள், அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பழனியில் நீர்வள நிலவளத்திட்டம் சார்பில் விவசாயிகளுக்கும், அலுவலர்களுக்கும் மூன்று நாள் பயிற்சி நடைபெற்றது.

    பழனி வட்டாரத்தில் நீர்வள, நிலவளத் திட்டத்தில் விவசாயிகள் மற்றும் அலுவலர்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் திண்டுக்கல் ரோடு பிஏஎஸ் ஹாலில் நடைபெற்றது. வியாழன் வரை நடைபெற்ற இந்த முகாமில் நூற்றுக்கணக்கான விவசாயிகள், மாவட்ட, வட்டார உதவி இயக்குநர் மற்றும் விவசாய அலுவலர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் வேளாண்மை இணை இயக்குநர் சம்பத்குமார் முகாமிற்கு தலைமை வகித்தார். பழனி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாந்தாமணி வரவேற்புரை வழங்கினார். வட்டார வேளாண்மை அலுவலர் கணேசன், துணை அலுவலர் துரைச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் தங்கச்சாமி பயிற்சியின் நோக்கம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். சென்னை மேலாண்மை ஆணையரகத்தில் இருந்து நீர்வள, நிலவளத் திட்ட பயிற்சியாளர்கள் நடராஜன், ரவீந்திரன் ஆகியோர் வந்து பயிற்சிகளை வழங்கினர். மழை நீரின் இன்றியமையாமை, வரும் 2017-இல் தண்ணீரின் அவசியம் குறித்த அப்துல்கலாம் கருத்து, தண்ணீர் இருப்பை கொண்டு பயிரிடப்பட வேண்டிய பயிர்கள் குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது. பல்வேறு தலைப்புகளில் தண்ணீரின் இன்றியமையாமை குறித்து குறும்படங்கள் காட்டப்பட்டன. பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் கோசல்நாத், மணிகண்டன், ஜெகநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai